தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் மாயம்; தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்! - பாளையங்கோட்டை

School Hostel girls missing case: பள்ளி விடுதியில் தங்கி, படித்து வந்த 11ஆம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மாயமான சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதியில் தங்கியிருந்த பிளஸ்1 மாணவிகள் மாயம்
விடுதியில் தங்கியிருந்த பிளஸ்1 மாணவிகள் மாயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2023, 6:33 PM IST

திருநெல்வேலி:பாளையங்கோட்டை அருகே முருகன்குறிச்சியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் 12ஆம் வகுப்புகள் வரை உள்ளன. இந்த பள்ளியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது.

அந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (செப்.17) வழக்கம்போல் விடுதி வார்டன், அங்கு தங்கியிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா? என்று எண்ணி பார்த்துள்ளனர். அப்போது அதில் 11ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை காணவில்லை என தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மாணவிகள் சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்த பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாயமான 2 மாணவிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறிப்பாக விடுதியின் வெளியே பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகள் மற்றும் விடுதி அருகே அமைந்துள்ள பிற சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் மாணவிகளை தேடி வருகின்றனர். அவர்களை தேடி கண்டுபிடித்த பின்னரே எதற்காக விடுதியை விட்டு வெளியேறினார்கள் என்ற விபரம் தெரியவரும்.

இதற்கிடையில் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் கடந்த மூன்று தினங்களாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரியில் விடுதிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றனர். ஆனால் தற்போது மாணவிகள் மயமான விடுதியில் மாணவிகளுக்கு விடுமுறை வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விடுதி நிர்வாகத்திடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்திக்காக பூப்பறிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details