விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்தச் செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாள் விழா வரும் 5ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், நெல்லை சிவராம் கலைக்கூடம் சார்பில் அங்கு பயிலும் இரண்டு மாணவிகள் மணலில் வ.உ.சி. உருவத்தை வரையும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்துஜா செல்வி, தீக்சனா ஆகிய இருவரும், வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், 150 சதுர அடி அளவுள்ள வெள்ளை நிற துணியில் கலர் மணலைக் கொண்டு வ.உ. சிதம்பரனாரின் உருவத்தை வரைந்தனர்.
இதற்கு எம்-சாண்ட், ஆற்று மணல், செம்மண் ஆகிய மூன்று மணல்களை மாணவிகள் பயன்படுத்தினர். இது குறித்து இந்துஜா செல்வி நம்மிடம் கூறுகையில், "கரோனோ காலத்தில் சிவராம் கலைக்கூடத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.