நெல்லை:டவுன் சாப்டர் அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் தரமற்ற முறையில் ஆபத்தாக காட்சியளிக்கும் பள்ளிக் கட்டடங்களை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அமைச்சர் முன் இடிக்கப்பட்ட ஆபத்தான பள்ளிக் கட்டடங்கள்:
இந்த ஆய்வின் அடிப்படையில், ஆபத்தாக காட்சியளிக்கும் கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பல்வேறு ஆய்வுப் பணிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார் .
அப்போது வண்ணாரப்பேட்டை மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் ஆபத்தாகக் காட்சியளிக்கும் வகுப்பறைக் கட்டடங்கள் இடிக்கும் பணிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அமைச்சர் முன்னிலையில் பள்ளிக் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
நெல்லையில் சுவர் இடிந்த விபத்தில் 3 மாணவர்கள் இறந்த சம்பவம் : எதிரொலியாக ஆபத்தாக காணப்பட்ட பள்ளிக்கட்டடம் இடிப்பு தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து சாப்டர் பள்ளி கட்டட விபத்தில் சிக்கிப் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மூன்று மாணவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க:மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து