நெல்லை மாவட்டம், சிவந்திபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தன் என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரின் நிலம் அபகரிப்பு தொடர்பாக புகார் அளித்தும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் பரமானந்தன் அளித்த புகாரில் அறிக்கை கேட்டும் விளக்கம் அளிக்காமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆஜராகமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேரில் ஆஜராக இரண்டு முறை ஆணையம் வாய்ப்பு கொடுத்தும் அவர் ஆஜராகாததால், தற்போது நெல்லை எஸ்பி சரவணனை கைது செய்து ஆணையத்தில் ஆஜர் செய்யும்படி தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராக் கார்க்கிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் இன்று (டிச.3) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை எஸ்பி-ஐ கைது செய்ய உத்தரவு - ஆதிதிராவிடர் நல ஆணையம் அதிரடி.. மேலும், ஆணையத்தின் உத்தரவை அவமதித்த காரணத்திற்காக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டுப்பகுதி ஆக்கிரமிப்பு - 8 வாரத்தில் மீட்க உத்தரவு