தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' - மனித உரிமை ஆணைய டிஎஸ்பி தகவல் - father son murder case

திருநெல்வேலி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.

human-rights-commission-dsp
human-rights-commission-dsp

By

Published : Jul 17, 2020, 7:08 PM IST

தூத்துக்குடி தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார். அதைத்தொடர்ந்து இன்று (ஜூலை17) திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பென்னிக்ஸ், ஜெயராஜ் உடல்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சாத்தான்குளம் கொலை வழக்கில் பென்னிக்ஸ், ஜெயராஜ் உடல்களை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களிடம் அரசு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதில் இருவரின் உடல்களிலும் ரத்த காயங்கள் இருந்ததா? தாக்கப்பட்ட அறிகுறிகள் இருந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். அதுதொடர்பான அறிக்கை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணைய டிஎஸ்பி குமார்

அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அடுத்தக்கட்ட விசாரணை சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டிடம் (நீதித்துறை நடுவர்) நடத்தப்பட உள்ளது. அதற்கு அனுமதி பெற்று விசாரணை நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களுக்கு ஜூலை 30 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details