தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை! - Sankarankoil Woman murder

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tirunelveli murder

By

Published : Nov 16, 2019, 12:03 AM IST

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள முல்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா என்ற சந்திரன். இவரின் வீடு தீப்பற்றி எரிந்ததால், அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

நிகழ்விடத்திற்கு வந்து பார்த்த தீயணைப்புத் துறையினர், வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பின்பு காவல் துறையினர் வீட்டினுள் எரிந்த நிலையிலிருந்த ராஜேஸ்வரி என்பவரது உடலைக் கைப்பற்றினர். அப்போது, ராஜேஸ்வரி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, பின்பு தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் வெறும் நகைக்காக மட்டும் நடந்ததா அல்லது வேறெதும் காரணத்திற்காக நடந்ததா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலியில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் ஆகியோர்களின் உதவியுடனும் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details