திருநெல்வேலி மாவட்டதில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை மனுவை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘மாவட்ட ஆட்சியரை சந்தித்து பத்து கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்திருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்த கருத்திற்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்து பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் ஆ. ராசா கருத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவ்வளவு மோசமான மனிதரை நாட்டில் வைப்பது எப்படி என்ற அடிப்படையிலேயே அனைத்து காவல் நிலையங்களிலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்துள்ளோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆ.ராசாவின் கருத்திருக்கு தக்க பதிலடி கிடைக்கும். மாநில காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஆளுங்கட்சி ஆ.ராசா மீது கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.