நெல்லை மாவட்டம் ராதாபுரத்திலிருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையில், இன்று (செப். 26) ஆண் சடலம் கிடப்பதாக ராதாபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.