தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரெம்டெசிவிர் 6 டோஸ் - ரூ.9408க்கு விற்பனை! - tamil nadu

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க குவிந்த மக்களுக்கு 6 டோஸ் அடங்கிய தொகுப்பு 9408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெம்டெசிவர் 6 டோஸ் - ரூ.9408 விற்பனை!
ரெம்டெசிவர் 6 டோஸ் - ரூ.9408 விற்பனை!

By

Published : May 10, 2021, 10:46 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

முன்னதாக சென்னையில் மட்டும் இந்த மருந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (மே 9) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மருந்து வழங்கப்படவில்லை, இதையடுத்து இன்று அதிகாலை முதலே நோயாளிகளின் உறவினர்கள், நண்பர்கள் மருந்து வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆறு டோஸ் அடங்கிய ரெம்டெசிவிர் ரூ. 9408க்கு விற்கப்படுகிறது.

குறிப்பாக ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்கு உரிய ஆவணங்கள் அதாவது நோயாளியின் கரோனா பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, மருத்துவரின் பரிந்துரை சான்று, நோயாளியின் ஆதார் அட்டை அசல், நகல் , மருந்து வாங்க வரும் நபரின் ஆதார் அசல், நகல் எடுத்து வர வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.

மருத்துவரின் பரிந்துரை சான்றை அங்குள்ள மருத்துவர் பரிசோதித்த பிறகே மருந்து வழங்கப்படுகிறது, அதில் நோயாளிக்கு லேசான பாதிப்பு என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு இந்த மருந்து தேவையில்லை என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருந்தால் மட்டுமே மருந்து வழங்கப்படுகிறது. சில டோஸ்களை மட்டும் பயன்படுத்திவிட்டு மீதம் உள்ள டோஸ்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மருந்து தேவைப்பட்டால், ஆறு டோஸ் மொத்தமாகத்தான் வழங்குவோம் அதுவும் பாதிப்பு அதிக அளவில் இருந்தால்தான் வழங்குவோம் என்று ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதையடுத்து லேசான பாதிப்பு உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு மருந்து வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 28,978 பேருக்கு கரோனா; 232 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details