தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு! - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

final
final

By

Published : Mar 23, 2021, 7:40 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்து மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு பரீசிலனை நடைபெற்றது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இறுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி, நாங்குநேரி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஐந்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் 190 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 108 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 82 பேரின் மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டது.

மேலும், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒருவர், நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 சுயேச்சை வேட்பாளர்கள், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளர், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் இரண்டு சுயேட்சை வேட்பாளர் என மொத்தம் 6 பேர் தங்கள் மனுவை இன்று வாபஸ் பெற்றனர்.

திருநெல்வேலி தொகுதியில் 14 பேர், அம்பாசமுத்திரம் தொகுதியில் 12 பேர், பாளையங்கோட்டை தொகுதியில் 10 பேர், நாங்குநேரி தொகுதியில் 15 பேர், ராதாபுரம் தொகுதியில் 25 பேர் என மொத்தம் 76 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று (மார்ச் 23) சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர் பால்கண்ணனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக மாற்று வேட்பாளர் மகேஷ் கண்ணன் மனு ஏற்கப்பட்டது.

இதையும் படிங்க:சந்தேகமிருந்தால் எனக்கு ஓட்டு போடாதீர்கள்!

ABOUT THE AUTHOR

...view details