தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையில் உயிரிழந்த பெண்: தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

திருநெல்வேலி: தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

f
f

By

Published : Jul 22, 2021, 11:40 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்திரா ராணி. இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்திரா ராணியின் கர்ப்ப பைக்கு அருகில் கட்டி இருந்ததால் உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஏ.ஆர்.சி தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக இந்திரா ராணியை திருநெல்வேலியில் உள்ள அவர்களின் மற்றொரு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று (ஜூலை.21) இந்திரா ராணிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கட்டியை எடுத்ததாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஏ.ஆர்.சி தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக குற்றஞ்சாட்டினர்.

உயிரிழந்த இந்திரா ராணியின் குடும்பத்தினர்

நாகர்கோவிலில் இருந்து வந்த இந்திரா ராணியின் உறவினர்கள் இன்று (ஜூலை.22) திருநெல்வேலி ஏ.ஆர்.சி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், உயிரிழந்த இந்திரா ராணிக்கு நியாயம் வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மேலப்பாளையம் காவல் நிலைய காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

இதையும் படிங்க: மெரினா கடற்கரையில் பெண் குழந்தையின் சடலம் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details