தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் நடிகர் வீட்டிலிருந்த பழங்கால உலோக சிலைகள் மீட்பு...

திருநெல்வேலியில் நடிகர் ஒருவரின் வீட்டிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால், பழங்கால உலோக சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நடிகர் வீட்டிலிருந்த பழங்கால உலோக சிலைகள் மீட்பு
நெல்லையில் நடிகர் வீட்டிலிருந்த பழங்கால உலோக சிலைகள் மீட்பு

By

Published : Nov 3, 2022, 12:59 PM IST

திருநெல்வேலி: ராஜவல்லிபுரத்தில் ஒரு வீட்டில் பழங்கால சிலைகள் இருப்பதாக, சிலை தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் ஜெயந்த் முரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நெல்லை சரக சிலை தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் காவல்துறையினர் ராஜவல்லிபுரம் சென்று அப்பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரது வீட்டில், அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அவரது வீட்டிலிருந்து 24 சென்டி மீட்டர் உயரம் உள்ள உலோக விநாயகர் சிலை, 43.5 சென்டி மீட்டர் உயரம் உள்ள சுவரில் மாட்டும் உலோக விநாயகர் சிலை, சிலுவையில் அறையப்பட்ட 9.5 சென்டி மீட்டர் அளவுள்ள இயேசுநாதர் சிலை, வடமாநிலத்தில் வழிபடக்கூடிய 8 சென்டி மீட்டர் உயரம் கொண்ட தாரா அம்மன் உலோக சிலை ஆகியவை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த சிலைகளை எந்தவொரு ஆவணம் இன்றி இருப்பதால் திருட்டு சிலைகளாக இருக்கலாமா என்ற சந்தேகமும் காவல்துறைக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து நடராஜனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார், இதனால் அவரிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சிலை தடுப்பு காவல்துறையினர் இந்த சிலைகள் எந்த பகுதியை சேர்ந்தது, கடத்தி வரப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 5 சிலைகளையும் டெல்லியில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி, இது எந்த காலத்தை சேர்ந்த சிலைகள், அதன் மதிப்பு என்ன என்பது குறித்து அறியவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

நடராஜன் சினிமாத்துறையில் புகைப்பட கலைஞராகவும், நடிகராகவும் உள்ளார் என்பதும், அழகு கலைப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார், என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:மூன்று சோழர் காலத்து உலோக சிலைகள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details