தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் போருக்கு தயார்; நெல்லையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டி! - rajini political entry

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நெல்லையில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அரசியல் போருக்குத் தயார் என் வாசகம் எழுதிய சுவரொட்டிகளை நெல்லை நகர்ப்பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.

ready for political war
அரசியல் போருக்கு தயார்; நெல்லையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

By

Published : Dec 5, 2020, 9:39 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியல் கட்சியாக திமுக, அதிமுக விளங்கி வருகிறது. இக்கட்சிகளின் மூத்த தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே மறைந்த நிலையில் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இருப்பினும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது நெருங்கிய தோழியான சசிகலா ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரபரப்பு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார்.

முதன் முதலாக கடந்த 1996ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சூசகமாக அறிவித்து தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், கடந்த மூன்றாம் தேதிவரை அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு செயல்வடிவம் பெறாமல் இருந்து வந்தது. இருப்பினும் அவ்வப்போது தனது அரசியல் பயணம் குறித்து சில கருத்துக்களை மட்டும் ரஜினிகாந்த் வெளியிட்டு வந்தார்.

தனது புது படங்கள் திரையரங்குகளில் ஓட வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே ரஜினி தனது அரசியல் அறிவிப்பை ஆயுதமாக பயன்படுத்துவதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர். தற்போது ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கும் பட்சத்தில் தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கி விட வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள், அரசியல் போருக்கு தயார் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை மாநகர் பகுதியில் ஒட்டி வருகின்றனர்.

அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை ரஜினி வெளியிட்ட சூழ்நிலையில் அவரது கருத்தை வெளிப்படுத்தி நெல்லை மாவட்டத்தில் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:‘எம்ஜிஆருடன் ரஜினியை ஒப்பிட முடியாது’ -அமைச்சர் ஜெயக்குமார்!

ABOUT THE AUTHOR

...view details