நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தளவாய். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் கொம்பையா (9) மே 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றவன் வீடு திரும்பவில்லை.
மாலை ஐந்து மணி வரை காத்திருந்த பெற்றோர் காணாமல்போன சிறுவனை பல இடங்களில் தேடியுள்ளனர். இரவுவரை கிடைக்காத நிலையில் தாழையூத்து காவல் நிலையத்தில் கொம்பையாவின் பெற்றோர் புகார் செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தாழையூத்து காவல் துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை குறிஞ்சிக்குள பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அங்கு ஒரு சிறுவனின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.