நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும்விதமாக அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரத யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாத்மா காந்தி 150ஆவது பிறந்தநாளையொட்டி ரத யாத்திரை...! - மகாத்மா காந்தி 150ஆவது பிறந்தநாள்
நெல்லை: செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரத யாத்திரை தொடங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட இயக்கத் தலைவர் விவேகானந்தன் ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ரத யாத்திரை ஆறு மாவட்டங்கள் வழியாகச் சென்று இறுதியாக வரும் ஒன்றாம் தேதி நெல்லையில் முடிவடைகிறது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த காந்திய இயக்கத் தலைவர் விவேகானந்தர், தற்போது நாட்டிலுள்ள சூழலில் காந்தியமே தீர்வாகும். எனவே மாணவர்கள், பொதுமக்கள், கட்சி சார்ந்தவர்கள், சாராதவர்கள் என அனைவரின் மனதிலும் காந்தியின் கொள்கையை விதைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.