தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரில் நின்றவாறு கையசைத்த ரஜினிகாந்த்.. நெல்லையில் ரசிகர்கள் உற்சாகம்! - பணகுடி

Rajinikanth Meet Fans: இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் “தலைவர் 170” படப்பிடிப்பு திருநெல்வேலி பணகுடியில் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் ரஜினியைக் காண ஆர்வமுடன் இருந்தபோது காரில் இருந்தபடி ரசிகர்களைப் பார்த்து ரஜினிகாந்த் கை அசைத்தார்.

Rajini Meet Fans
ரஜினியை சந்திக்க மணிக்கணக்கில் காத்து கிடந்த ரசிகர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 10:29 AM IST

Updated : Oct 11, 2023, 11:05 AM IST

காரில் நின்றவாறு கையசைத்த ரஜினிகாந்த்

திருநெல்வேலி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சமீபத்தில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் ஜெயிலர் திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஜெயிலர் படம் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கத் தொடங்கி உள்ளார். இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினியின் 170வது படம் உருவாகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் “தலைவர் 170” படப்பிடிப்பு தொடங்கியது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள தனியார் மண் ஓடு தயாரிக்கும் தொழிற்கூடத்தில் நடைபெறுகிறது.

இதற்காக, ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்து தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். பின் நேற்று காலை 10 மணி அளவில் சொகுசு கேரவன் மூலம் படப்பிடிப்பு நடைபெறும் நெல்லை பணகுடி பகுதிக்கு வந்தார். அப்போது சாலையில் கூடியிருந்த ரசிகர்களைக் கண்டவுடன் ரஜினிகாந்த் காரை நிறுத்தச் சொல்லி, ரசிகர்களைப் பார்த்து கை அசைத்தார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் ‘தலைவா தலைவா’ என்று கோஷமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஓடு தயாரிக்கும் தொழில் கூடத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் சில சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வரை படப்பிடிப்பு நீடித்தது. இரவு படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினிகாந்த் மீண்டும் காரில் பணகுடியில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது பணகுடியில் சாலை ஓரம் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு மணிக்கணக்கில் ரசிகர்கள் காத்து இருந்தனர். இதை அறிந்த ரஜினிகாந்த், காரின் மேல் பக்க கதவைத் திறந்து, அதன் மேல் நின்றபடி ரசிகர்களைச் சந்தித்தார். இருபுறமும் கூடி இருந்த ரசிகர்களைப் பார்த்து அவர் கையெடுத்து கும்பிட்டு புன்னகைத்தபடி வணக்கம் வைத்தார். மேலும், இன்றும் பணகுடி பகுதியில் ரஜினி கலந்து கொள்ளும் காட்சிகள் படம் பிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:லியோ பட நடனக் கலைஞர்களுக்கான சம்பள விவகாரம்; FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்

Last Updated : Oct 11, 2023, 11:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details