தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

திருநெல்வேலி: மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு
அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

By

Published : Nov 17, 2020, 10:40 AM IST

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த 6 நாள்களாக தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கடந்த 12ஆம் தேதி தொடங்கிய மழை நேற்று (நவ.15) நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று பகல் முழுவதும் திருநெல்வேலி மாநகர், மாவட்டத்தின் பிற பகுதிகளில் தொடர்ச்சியாக கன மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக அணை பகுதியில் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் (காரையார்) மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகள்தான் விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய முக்கிய அணைகளாக இருந்து வருகின்றன. பாபநாசம் பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 138 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

அணைகளின் நீர்மட்டம்

  • 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று (நவ.17) பெய்த தொடர் மழையால் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, தற்போது அணையின் நீர்மட்டம் 111 அடியாக அதிகரித்துள்ளது.
  • 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 18 அடி உயர்ந்து, தற்போது நீர்மட்டம் 118 அடியாக அதிகரித்துள்ளது.
  • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி அதிகரித்து, தற்போது 86 அடியாக உள்ளது.
    அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

அதேபோல் மாவட்டத்தின் வடக்கு பச்சையாறு அணை, நம்பியாறு அணை, கொடுமுடியாறு அணை ஆகிய அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக அதிகரித்துள்ளது. மழை அளவைப் பொறுத்தவரை அதிகபட்சம் பாபநாசம் பகுதியில் 138 மில்லி மீட்டர், சேர்வலாறு பகுதியில் 74 மி.மீ, மணிமுத்தாறு பகுதியில் 63.4 மில்லி மீட்டர், நம்பியாறு பகுதியில் 27 மில்லி மீட்டர், திரநெல்வேலி-பாளையங்கோட்டை பகுதியில் 75 மில்லி மீட்டர் முறையே மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை: விவசாயிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details