தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’அரசு வேலையும் கிடைக்கல, சலுகையும் கிடைக்கல...’ - காட்டு நாயக்கர் சமூக மக்கள் வேதனை! - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருநெல்வேலி: சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் அரசு வேலைக்குச் செல்ல முடியாமலும் அரசின் சலுகைகளை பெற முடியாமலும் சிரம்ப்படுவதாக காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

Protest
Protest

By

Published : Aug 25, 2021, 10:31 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக அரசு சார்பில் சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமலும், பள்ளிச் சான்றிதழில் காட்டுநாயக்கர் என்று குறிப்பிடப்பட்டும் இருந்து வருகிறது.

இருப்பினும் சாதிச்சான்றிதழ் வழங்கப்படாததால் அரசு வேலைக்குச் செல்ல முடியாமலும் அரசின் சலுகைகளை பெற முடியாமலும் சிரமப்படுவதாகக் கூறி அச்சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அரசுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பிய அவர்கள், ”சமூக நீதியை காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் திமுக ஆட்சி, காட்டு நாயக்கர் சமூக மக்களுக்கும் சாதிச்சான்றிதழ் வழங்கி அரசின் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை சாதிச்சான்றிதழுக்காக போராடி வரும் காட்டுநாயக்கர் சமூக மக்களின் கதை சமூக ஆர்வலர்களளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details