நெல்லை:தமிழ்நாடு அரசு கூட்டுறவு கடன் சங்கங்களில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு 5 பவுன் வரை கடன் தொகை தள்ளுபடி வழங்க ஆணை பிறப்பித்து இருந்தது.
அதன்படி ராதாபுரம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏராளமான நகைகளை வைத்திருந்தனர் . இதில் ஐந்து பவுனுக்குக் குறைவாக வைத்திருந்த 191 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் வாங்கிய செயலாளர் : சபாநாயகரிடம் புகார் சபாநாயகரிடம் புகார்:இந்நிலையில், அங்கு கூட்டுறவு சங்க செயலாளராக பணியாற்றிவரும் நம்பி குமார் என்பவர் நகைக் கடன் ரத்து செய்யப்பட்ட பயனாளிகளிடம் வட்டிக்குப் பணம் செலுத்தவேண்டும் என்று கூறி ரூ.5000 முதல் ரூ.15000 வரை பணம் பெற்றுக்கொண்டு நகையைத் திருப்பிக் கொடுத்திருக்கிறார். மேலும், பணம் கொடுத்தால்தான் திருப்பித் தரப்படும் எனவும் கூறியிருக்கிறார்.
இதனிடையே நகை அடகு வைத்த 2 பெண்கள் நேற்று ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான அப்பாவுவிடம் இது குறித்து மனு அளித்தனர். மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கூட்டுறவு சார்பதிவாளர் அழகிரிக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்பேரில் கூட்டுறவு சங்க இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடங்கிய 5 பேர் இன்று திடீரென ராதாபுரம் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்த பெண்கள் மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வாங்க வந்த அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு எழுத்து பூர்வமக எழுதி வாங்கி வருகின்றனர். விசாரணையை பொருத்து கூட்டுறவு சங்க செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க:கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது - அமைச்சர் துரைமுருகன்