தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் குற்றவாளிகளாக மாறுவது ஏன்? - மனநல மருத்துவர் விளக்கம்! - சாதி வெறியால் பள்ளி மாணவன் தாக்குதல்

திருநெல்வேலியில் சாதி வெறி காரணமாக பள்ளி மாணவனை சக மாணவர்கள் சேர்ந்து கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைய ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் குற்றவாளிகளாக மாற காரணம் என்ன என்பது குறித்து பிரபல மனநல மருத்துவர் பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 11, 2023, 10:22 PM IST

மனநல மருத்துவர் பன்னீர்செல்வம்

திருநெல்வேலி: நாங்குநேரி அருகேவுள்ள பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியின் மகன் 17 வயது மாணவன். இவர் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் (ஆக.09) சாதி பாகுபாடு காரணமாக சக மாணவர்கள் ஆறு பேர் மாணவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சரமாரியாக அறிவாளால் வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது சகோதரிக்கும் வெட்டு விழுந்த்து. இதில் படுக்காயம் அடைந்த அண்ணன், தங்கை இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவனுக்கு ஏற்கனவே பள்ளியில் வைத்து மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இடையூறு கொடுத்துள்ளனர். குறிப்பாக சாதி பாகுபாடு காட்டி அம்மாணவனை அடிக்கடி துன்புறுத்தியதால் மனம் உடைந்த மாணவன் தன்னை வேறு பள்ளிக்கு மாற்றும்படி தாயாரிடம் கூறியிருக்கிறாஅர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் அம்பிகாவதி முறையிட்டதை தொடர்ந்து சாதி பாகுபாடு பார்த்த சக மாணவர்களை பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கும்பலாக சேர்ந்து அம்பிகாவதியின் மகனை கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தியது விசாரணைக்கு பின் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து நாங்குநேரி காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு மாணவர்களை கைது செய்து அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். ஏற்கனவே நெல்லையில் தொடர்ச்சியாக மாணவர்கள் சாதி மோதலில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு இதே நெல்லை மாவட்டம் பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசுப் பள்ளி மாணவன் ஒருவனை சக மாணவர்கள் சாதி பிரச்னை காரணமாக அடித்துக் கொலை செய்தனர். எனவே கொலை செய்யும் அளவுக்கு மாணவர்களின் மனநிலை மாற காரணம் என்ன என்பது குறித்து ஈடிவி பாரத் சார்பில் நெல்லையை சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் பன்னீர்செல்வனிடம் பிரத்யேக நேர்காணல் எடுக்கப்பட்டது.

அப்போது அவர் கூறுகையில், “மாணவர்கள் இது போன்று கும்பலாக சேர்ந்து கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளியாக மாறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நிச்சயமாக மனரீதியாக பாதிப்பு இருக்கும். மாணவர்களின் இந்த மனநிலைக்கு மாறுவதற்கு அவர்கள் குடும்பம் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். குறிப்பாக குடும்பத்தில் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவராகவும் அல்லது வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி சண்டை போடுவது ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல் போதை பழக்கங்களால் மாணவர்கள் இது போன்ற மனநிலைக்கு மாறலாம்.

இதை தடுக்க இரண்டு வழிகளை செய்யலாம், பெற்றோர்கள் மாணவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவர்களிடம் அவ்வப்போது மனம் விட்டு பேச வேண்டும். இரண்டாவதாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும். மேலும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை பள்ளியில் பெற்றோர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும். அப்போது, மாணவர்கள் முன்னிலையில் பெற்றோர்களிடம் மாணவனின் மனநிலை குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளை தவிர மனநல மருத்துவர்களிடமும் மாணவர்கள் கவுன்சிலிங் பெறலாம். அதேபோல் பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவதால் மாணவர்கள் இது போன்ற குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.

எனவே அதை தவிர்த்து விட்டு மாணவர்கள் விளையாட்டில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பள்ளிகளிலும் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது மூலம் மாணவர்களை குற்றச் செயலிலிருந்து தடுக்க முடியும். மனதில் ஏதோ ஒரு பாதிப்பு இருப்பதால் தான் கொலை செய்யும் அளவுக்கு மாணவர்கள் தள்ளப்படுகிறார்கள். சில மாணவர்கள் சரியாக படிக்க முடியாத காரணத்தால் இந்த நிலைக்கு தள்ளப்படலாம். மேலும், கெட்ட மாணவர்களின் சேர்க்கை காரணமாகவும் இது போன்ற மனநிலை ஏற்படலாம். எடுத்த உடனே இது போன்ற குற்றச் செயலில் மாணவர்கள் ஈடுபட மாட்டார்கள். ஏற்கனவே அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

உளவியல் ரீதியாக அந்த மாற்றத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். பெற்றோர்களின் சொல் பேச்சை கேட்காமல் இருப்பது, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது, போதை பழக்கத்திற்கு அடிமையாவது, இது போன்ற முன் அறிகுறிகள் இருக்கும். எனவே மாணவர்களை இந்த போக்கில் இருந்து தடுக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் என சமூகத்தில் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. போதை பழக்கத்தால் இது போன்ற குற்றச் செயல்களில் மாணவர்கள் அதிகம் ஈடுபடலாம்.

குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள 50 விழுக்காடு மாணவர்கள் ஏதோ ஒரு வகையான போதைக்கு முயற்சி செய்திருப்பார்கள்” என தெரிவித்தார். எனவே அவற்றை தடுக்க அரசு சார்பில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். எங்களைப் போன்ற மருத்துவர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் இந்த மன நிலை குறித்து அதிக ஆராய்ச்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:அரசு தலைமை மருத்துவமனையில் காணாமல் போன சிறுவன், சிறுமி மீட்பு; கடத்தியவருக்கு போலீஸ் வலைவீச்சு!!

ABOUT THE AUTHOR

...view details