தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருந்ததிராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலி: மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் அருந்ததி ராய் கட்டுரை நீக்கப்பட்டதை கண்டித்து திராவிடர் மாணவர் கழகத்தினர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருந்ததிராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்
அருந்ததிராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 21, 2020, 3:27 PM IST

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் முதுகலை ஆங்கில படத்தின் மூன்றாவது பருவத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ என்ற கட்டுரை நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே அந்த பாடத்திட்டத்தில் மீண்டும் அருந்ததி ராய் கட்டுரையை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அருந்ததி ராயின் கட்டுரையை பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திராவிட மாணவர் கழகத்தினர் இன்று (நவ.21) ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் திராவிட மாணவர் கழக மண்டல செயலாளர் சௌந்திரபாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்தார்.

இதையும் படிங்க: அருந்ததிராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி மாணவர் அமைப்பினர் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details