டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் டெல்லி காவல் துறையினர் கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது வருகின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருநெல்வேலி மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யும் டெல்லி காவல் துறையை கண்டித்தும் மாவட்ட செயலாளர் இம்ரான் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.