சென்னை: கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிட்டு மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "சென்னை உள்பட 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மற்றும் வார்டுகள் மறுவரை செய்யப்பட்டு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 28ஆம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும். வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்காக மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அடுத்த மாதம் 4 ஆம் தேதி கடைசி நாள், 5ஆம் தேதி மனுக்களை பரிசீலனை செய்யப்படும். 7 ஆம் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வாக்கு எண்ணிக்கை 22-02-2022 அன்று நடைபெறும். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் 02-03-2022 அன்று பதவியேற்றுக் கொள்வார்கள்.
மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் மாதம் 4ஆம் தேதி நடைபெறும். அன்றைய தினம் இத்தகைய பதவிகளுக்கு தேர்தல் நடக்கும்.
இன்று முதல் தேர்தல் நடைபெறக்கூடிய பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.
சிசிடிவி கேமரா பதிவு
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகள் கண்காணிப்பு கேமரா சிசிடிவி பதிவு செய்யப்படும்.
12,838 பதவிகளுக்கான தேர்தல்
நேரடித் தேர்தல்கள் நடைபெற உள்ள 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 138 நகராட்சிக்குட்பட்ட 3, 843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் 490 பேரூராட்சிக்குட்பட்ட 7621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்குச்சாவடிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கையாக வெப்பமானி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட 13 பொருள்கள் வழங்கப்படும்.
வாக்குச் சாவடிகள்
மாநகராட்சிகளில் 1,57,158 வாக்குச் சாவடிகள், நகராட்சிகளில் 7,417 வாக்குச்சாவடிகள், பேரூராட்சியில் 8,454 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எளிதாக வந்து வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை
இந்த தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆண் வாக்காளர்களும், ஒரு கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 637 பெண் வாக்காளர்களும், 4,324 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரத்து 754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்