திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி மரிய சிலுவை (45) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறைக் காவலர்கள் அனுமதித்தனர்.
இந்தச் சூழ்நிலையில் இன்று (ஜூலை 10) காலை மரிய சிலுவை மருத்துவமனை கழிவறைக்கு சென்றபோது அங்கே வைத்திருந்த மிளகாய் பொடியை எடுத்து காவலர்கள் கண்ணில் தூவி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.