தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தங்கையா (50), பாளையங்கோட்டை மத்திய சிறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். சமீபத்தில் இவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தூத்துக்கு அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பாளை சிறை அலுவலக கண்காணிப்பாளர் கரோனாவால் மரணம் - Corona virus
திருநெல்வேலி: பாளையங்கோட்டை சிறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், பாளையங்கோட்டை சிறையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலுவலர்கள் மிகுந்த அலட்சியம்காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது உயிரிழந்த தங்கையாவை தவிர, சிறையில் மேலும் ஆறு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் சிறை வளாகத்தில் கிருமிநாசினி தெளித்து கைதிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்வது போன்ற எந்த ஒரு பாதுகாப்பு வழிமுறைகளையும் செய்யாமல் சிறை நிர்வாகம் அலட்சியம் காட்டிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாளையங்கோட்டை சிறையில் மேலும் பலருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.