நெல்லை மாவட்டம் சீவலப்பேரியை அடுத்து அமைந்துள்ளது பர்கிட் மாநகரம். இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. சகல வசதிகளுடன் செயல்பட்டு வந்த இந்த மருத்துவமனையின் நிலை தற்போது மிகவும் மோசமானதாக இருக்கிறது.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி - Nellai
நெல்லை: சீவலப்பேரி பகுதியில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் அங்குள்ள 19 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
மருத்துவர்கள் இல்லாமல் அங்கிருக்கும் ஒரு செவிலியர் மட்டும் இங்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறார். அதிலும் காய்ச்சல், தலைவலி போன்ற சில நோய்களுக்கு மட்டும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மற்ற நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி கிராமத்திலும் இதேபோல் மருத்துவர்கள் இல்லாததால் தாயும் சேயும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் அவசரக் காலங்களில் 15 கிலோமீட்டர் சுற்றி மேடு பள்ளமான சாலைகளைக் கடந்துதான் சிகிச்சைக்குச் செல்ல வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.