சீனாவில் தொடங்கி தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிற்கும் பரவியுள்ளது. கேரளா மாநிலத்தில் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் அவசர மருத்துவ குழு ஏற்பாடுகள் என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துவருகிறது.
இதுவரை யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவித்தாலும் பொதுமக்கள் ஒருவித பீதியில் உள்ளனர். மேலும் பிராய்லர் கோழியிலிருந்து கொரோனா பரவுகிறது என்ற வாட்ஸ் ஆப் செய்திகளும் உலா வந்து கொண்டிருந்தன.
கோழியின் விலை கடும் சரிவு இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலான இடங்களில் பிராய்லர் கோழி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ ரூ150-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது கோழி உயிருடன் 50 ரூபாய்க்கும், இறைச்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால், கோழிப்பண்ணை விற்பனையாளர்கள், வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கறிக்கோழி விலை சரிவு: வேதனையில் உற்பத்தியாளர்கள்