திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தை அடுத்த குருந்துடையார்புரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் மாரிக்குட்டி (22). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி (34 ) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாரிக்குட்டியை செல்போனில் அழைத்துள்ளார் மாடசாமி. முன்விரோதத்தை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறி அழைத்ததால் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இருவரும் சென்று பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென மாடசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரிக்குட்டி தலையில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார்.