திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் இரண்டு வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஜித்தின் தலையை சுற்றிமண் விழுந்துள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் 50 மணிநேரமாகியும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சுஜித்தைக் காப்பாற்ற பிரார்த்தனை! - சுர்ஜித் பிரார்த்தனை
திருநெல்வேலி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டு வயது குழந்தை சுஜித்தை பாதுகாப்பாக மீட்க இஸ்லாமியர்கள் மேலப்பாளையத்தில் தொழுகையில் ஈடுபட்டனர்.
![சுஜித்தைக் காப்பாற்ற பிரார்த்தனை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4884902-thumbnail-3x2-prayer.jpg)
Prayer For Surjith
இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால் தற்போது ரிக் இயந்திரத்தைக் கொண்டு அருகில் குழி தோண்டிவருகின்றனர். இந்நிலையில், சுஜித் பாதுகாப்பாக மீண்டுவர வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சிறப்பு தொழுகை திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள மசூதியில் நடைபெற்றது. இதேபோல், திருவாரூரில் உள்ள மசூதியிலும் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: செயற்கைக்கோள் அனுப்பும் நம்மிடம் குழந்தையை மீட்க என்ன கருவிகள் உள்ளது? திருமா கேள்வி