திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் உள்ளன. இந்த நிலையில் இரண்டாவது அணு உலையில் இன்று (மே.25) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் - tirunelveli district news
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம், தமிழ்நாட்டிற்கு பாதிப்பு!
தொடர்ந்து முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தத் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 500 மெகாவாட் மின்சாரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்