தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிந்துவரும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு முழுவதும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்களுக்குப் பிற சிகிச்சைகள் குறித்து அனுபவம் கிடைத்திருக்காது என்ற அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசின் இந்த முடிவுக்குப் பயிற்சி மருத்துவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
எனவே பயிற்சிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்றும், உடனடியாக தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் இன்று (ஜூன் 1) போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் முதல்நிலை பயிற்சி மருத்துவ மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு அமைதியாகக் கூடிநின்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் கோரிக்கைகள்