திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக்கடையான ஆர்.எம்.கே.வி.யில் பணியாற்றும் ஊழியர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தாெடர்ந்து அந்த ஜவுளிக்கடைக்கு விரைந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் உடனடியாக கடையை மூட உத்தரவிட்டனர்.