தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் விஷமருந்தி தற்கொலை! - குற்றச் செய்திகள்

திருநெல்வேலியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையைக் கைவிடுக!
தற்கொலையைக் கைவிடுக!

By

Published : Oct 28, 2021, 11:37 AM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஹைகிரவுன்ட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் பழனி. இந்நிலையில் பழனி நேற்று முன்தினம் (அக்.26) இரவு திடீரென விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் பழனியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனி நேற்று (அக்.27) உயிரிழந்தார். இதற்கிடையே பழனியின் உயிரிழப்புக்கு உயர் அலுவலர்களின் அழுத்தமே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காவல் ஆய்வாளர் மீகா, பழனியை ஒருமையில் பேசி அதிக பணிச்சுமை வழங்கியதே தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனி

சமீபத்தில் பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் பணி சுமை காரணமாக எனது இதயத்துடிப்பு நின்று விடலாம் என பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தற்கொலையைக் கைவிடுக!

பணிச்சுமை காரணமாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அரும்புகளின் காதல் விவகாரம் : சிறுவனை தாக்கிய சிறுமியின் பெற்றோர் மீது புகார்

ABOUT THE AUTHOR

...view details