தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருகும் பயிர்களை காக்க தண்ணீர் கேட்டுப் போராட்டம்.. விவசாயிகளுக்கு போலீசார் கொடுத்த அதிர்ச்சி!

விவசாயத்திற்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து வாக்காளர் அட்டையை துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். .

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 7:43 AM IST

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் பிரதான அணைகளான நெல்லை பாபநாசம், காரையார் சேர்வலாறு, மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து காரீப் பருவ சாகுபடிக்காக கடந்த ஜுலை மாதம் 19ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடர்ந்து 105 நாட்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 4ஆம் தேதி அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு விவசாயித்திற்கான தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள், பயிர்கள் கருகும் சூழ்நிலைக்கு தள்ளுப்படுவதை கருத்தில் கொண்டு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுமெனவும், தண்ணீர் நிறுத்தப்பட்டதை கண்டித்தும் தங்கள் வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சேரன்மகாதேவி, பத்தமடை அரிகேசவநல்லூர், வீரவநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேரன்மகாதேவியில் ஊர்வலமாக வந்து, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

மேலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்துவிட்டு திரும்பி சென்றனர். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் சேரன்மகாதேவி போலீசார், விவசாயிகள் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கன்னடியன் கால்வாய் விவசாய சங்க தலைவர் பாபநாசம் உள்பட 200 ஆண்கள், 100 பெண்கள் என 300 பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் (143, 341, 290) வழக்குப்பதிவு செய்தனர். விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு வந்த போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை விவகாரம்: விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை?

ABOUT THE AUTHOR

...view details