திருநெல்வேலி:திசையன்விளை அருகே விஜய அச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த அருள் (43) என்பவர், கள்ளச்சந்தையில் மது விற்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதற்கிடையில், அருள் பெட்டைகுளம் டாஸ்மாக் கடையிலிருந்து 180 மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக் காரில் கொண்டு சென்றுள்ளார். இது குறித்த தகவலறிந்த காவல்துறையினர் அருளைப் பிடிக்க முயன்றனர்.