நெல்லை : கடந்த 2018-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாடசாமியின் மகன் விக்னேஷ்(24) என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விக்னேஷை கைது செய்தனர்.
போக்சோ வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு! - நெல்லை மாவட்டம்
நெல்லை அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி விக்னேஷ் என்பவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.