தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்! - Nellai Chennai Vande Bharat Train status

நெல்லை - சென்னை, விஜயவாடா - சென்னை வந்தே பாரத் உள்பட நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ள 9 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Modi
Modi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 10:07 AM IST

Updated : Sep 24, 2023, 5:19 PM IST

ஹைதராபாத் :நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் உள்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்த்ததாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. அதேபோல் தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களின் முன்பதிவும் முடிந்ததாக தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது.

நெல்லை -சென்னை வந்தே பாரத், உதய்பூர் - ஜெய்ப்பூர், ஐதராபாத் - பெங்களூரு, விஜயவாடா - சென்னை, பாட்னா - ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா - புரி, ராஞ்சி - ஹவுரா மற்றும் ஜாம்நகர் - அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரயில் சேவை தொடங்கிய முதல் நாளில் நெல்லை - சென்னை இடையே ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி கிடையாது என தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது. தொடக்க விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயிலை விளம்பரப்படுத்தும் வகையில் கூடுதல் நிலையங்களில் நிறுத்தி ரயிலை காட்சிப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

இதில், நெல்லை - சென்னை எழும்பூர், விஜயவாடா - சென்னை சென்ட்ரல், காசர்கோடு- திருவனந்தபுரம் இடையிலான 3 வந்தே பாரத் ரயில்களுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயிலின் (எண்: 20665) வழக்கமான சேவை நாளை (செப். 25) தொடங்குகிறது. சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்படும் வண்டி இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை ரயில் இயங்காததால் நெல்லையில் இருந்து சென்னைக்கு செப்டம்பர் 27ஆம் தேதி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் வந்தடையும். இரு மார்க்கங்களிலும் செவ்வாய்க்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்களும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,665க்கும், எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.3,055க்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து விருதுநகருக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,450க்கும், எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.2,675க்கும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், மதுரைக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.1,365க்கும், எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.2,485க்கும், திருச்சிக்கு ஏசி சேர் கார்வகுப்புக்கு ரூ.895க்கும், எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.1,740க்கும், விழுப்புரத்துக்கு ஏசி சேர் கார் வகுப்புக்கு ரூ.600க்கும், எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.1,145க்கும் பயண கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மற்றபடி சென்னை சென்ட்ரல் - விஜயவாடா இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை செப்டம்பர் 25 ஆம் தேதி தொடங்குகிறது. 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் சென்னை - விஜயவாடா இடையே ஏசி சேர் வகுப்பு ரூ.1,320க்கும், எக்ஸிகியூடிவ் சேர் கார் வகுப்புக்கு ரூ.2,540க்கும் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க :தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகியிடம் வாக்குவாதம்! புதுக்கோட்டை கிரிக்கெட் சங்கத்தினர் திடீர் முற்றுகை! என்ன காரணம்?

Last Updated : Sep 24, 2023, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details