திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி பெருமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஜிட் வென்சி.
வெளிநாட்டில் சிக்கிய கணவரை மீட்டு தரக்கோரி எம்.எல்.ஏ.விடம் மனு! - திருநெல்வேலி மாவட்ட
திருநெல்வேலி: வெளிநாட்டில் சிறைபிடிக்கப்பட்ட தனது கணவரை மீட்டு தரக்கோரி ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினரிடம் மீனவப் பெண் ஒருவர் மனு அளித்தார்.

இவர் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரையை இன்று (ஆக.25) நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், “எனது கணவர் சூசை கார்லோ கடந்த 30ஆண்டுகளாக சவுதி அரேபிய நாட்டில் மீன்பிடித்தொழில் செய்துவருகிறார். வருடம் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வார்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சவுதி அரேபியா சென்றார். பின்னர் ஒரு வருடமாக அவர் எங்களுடன் தொடர்பில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் என் கணவருடன் வேலை பார்த்து வந்த சக ஊழியர்களிடம் கேட்டபோது கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க போனதால் பக்ரைன் நாட்டு சிறையில் எனது கணவர் அடைக்கப்பட்டு இருப்பதாக முதலில் எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கணவர் வேலை செய்யும் நிர்வாகத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி எனது கணவர் நிலை குறித்து கேட்டபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்கிறார்கள். இதனால் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட இன்பதுரை எம்.எல்.ஏ. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களிடம் பேசி மீனவப் பெண்ணின் கணவரை மீட்டு தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார்.