தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி இறந்த கரடி: குழிதோண்டி புதைத்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்த கரடியின் உடலை குழிதோண்டி புதைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மின்வேலியில் சிக்கி இறந்த கரடி: குழிதோண்டி புதைத்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
மின்வேலியில் சிக்கி இறந்த கரடி: குழிதோண்டி புதைத்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

By

Published : Oct 16, 2022, 11:55 AM IST

திருநெல்வேலி:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு வனச்சரகம் களக்காடு காப்புகாட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஜெயராஜ் என்பவர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்ததாகவும் புகார்ள் எழுந்தன.

குறிப்பாக அந்த மின் வேலியில் கரடி ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது. அதை ஒரு கும்பல் தோட்டத்திற்கு அருகில் உள்ள குளத்து பகுதியில் ஆழமாக குழி தோண்டி புதைத்ததாக களக்காடு வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் முண்டந்துறை புலிகள் காப்பக கணை இயக்குனர் ராமேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

வன விலங்கை புதைத்த இடத்தை தோண்டி பார்த்ததில் கரடி புதைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்றையினர் வழக்குப்பதிவு செய்து தோட்டக் காவலாளி கணேசனைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோட்டக்காரர் ஜெயராஜ் பக்கத்து தோட்டங்களைச் சேர்ந்த கசாலி கண்ணன் பாலம் ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதன் பின்னனியில் பெரிய கும்பல் ஒன்று இருப்பதாக வனத்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த கும்பலுக்கு வனத்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையிலிருந்து கோவை வழியே சிறப்பு ரயில் - பீகார் மாநிலம் சென்றடையும்

ABOUT THE AUTHOR

...view details