தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறை சார்பில் குறைதீர் முகாம்: 234 மனுக்களுக்கு உடனடி தீர்வு

திருநெல்வேலி: காவல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது.

குறைதீர் முகாம்
குறைதீர் முகாம்

By

Published : Sep 27, 2020, 9:57 AM IST

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட அனைத்து காவல் உட்கோட்ட பகுதிகளிலும் நேற்று(செப் 26) மக்கள் குறைதீர்க்கும் முகாம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அளித்துள்ள புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் உடனடி தீர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை தாழையூத்து தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்துகொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்டத்தில் மக்கள் மனுக்கள் மீதான விசாரணை காலதாமதம் ஆவதை தடுப்பதற்காக உடனடி தீர்வு காணும் வகையில் இந்த முகாம்களை நடத்த முடிவு செய்து அதன்படி தாழையூத்து உட்கோட்டத்திற்கு துணை காவல் கண்காணிப்பாளர் அர்ச்சனா தலைமையில் தாழையூத்து சிவந்தி ஆதித்தனார் மஹாலில் வைத்து குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இதில் 78 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது., நாங்குநேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்விஸ்ரீ லிசா ஸ்பிலா தெரஸ் தலைமையில் சுப்பு லட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் 43 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது,

வள்ளியூர் உட்கோட்ட பகுதியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜூ தலைமையில் ஐயா திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் 20 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்ஸிஸ், தலைமையில் அம்பை வேல்சாமி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் 30 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

சேரன்மகாதேவி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 64 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம் அனைத்து உட்கோட்ட பகுதிகளில் தற்போது மட்டும் 234 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உள்ளது என்றார்.

இதையுன் படிங்க: குடி தண்ணீர் எடுக்கச் சென்ற சலவைத் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details