உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படும் எனவும் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மதிக்காத மக்கள் இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஏழு எல்லைகளில் தடுப்புகள் அமைத்து முடி வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மதிக்காத மக்கள் இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு பிறப்பித்தும் பொதுமக்கள் வெளியே வந்த வண்ணம் உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டும் வந்தால் போதும் என்று தெரிவித்தும் அதை பயன்படுத்தி இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கரோனா தாக்கம் குறித்து எடுத்துக்கூறி அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தபாடு இல்லாததால் காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாலையில் சுற்றித்திரிந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி!