தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை அருகே அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்: உரிய இடத்தில் இறக்கி விடவில்லை என புகார் - நெல்லை அருகே அரசு பேருத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

நெல்லை அருகே உரிய இடத்தில் இறக்கி விடாததால் அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

அரசு பேருத்தை சிறைபிடித்த பொதுமக்கள்
அரசு பேருத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

By

Published : Jul 21, 2022, 10:58 PM IST

திருநெல்வேலி:குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி சொல்லும் அரசு பேருந்தில் நாங்குநேரியை சேர்ந்த ஆறுமுக நயினார் என்ற பயணி ஏறியுள்ளார்.

அந்தப் பயணி நடத்துனரிடம் நாங்குநேரி ஊருக்குள் செல்ல வேண்டும் என பயணச்சீட்டு கேட்டார். அப்பொழுது நடத்துனர் முதலில் செல்லும் என்று கூறினார். பின்னர் அவர் தான் வைத்திருந்த செல்போனில் யாரிடமோ பேசிவிட்டு பேருந்து நாங்குநேரி ஊருக்குள் செல்லாது என்றார்.

அரசு பேருத்தை சிறைபிடித்த பொதுமக்கள்

நாங்குநேரி பைபாஸில் இறங்கிக் கொள்ளுங்கள் என கூறி திருநெல்வேலிக்கு உண்டான பயணக் கட்டணத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆறுமுக நயினார் முதலில் நாங்குநேரி செல்லும் என கூறிவிட்டு இப்போது போகாது என்று ஏன் கூறுகிறீர்கள் என கேட்டுள்ளார்.

இதெல்லாம் எங்களுக்கு தெரியாது நாங்கள் நாங்குநேரி பைபாஸ் வழியாகத்தான் பேருந்தை இயக்குவோம் என நடத்துனர் தெரிவித்தார். உடனே ஆறுமுக நயினார் என்ன செய்வதென்று தெரியாமல் தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே நான்குநேரி பைபாசில் ஆறுமுக நயினாரின் நண்பர்கள் பொதுமக்களுடன் வந்து பேருந்தை சிறைபிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்துனர் கையில் வைத்திருந்த சீட்டை வாங்கிப் பார்த்தபொழுது அதில் நாங்குநேரி நிறுத்தம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த நாங்குநேரி காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சொத்தை அபகரித்து கொலை மிரட்டல்; ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அடாவடி - பாதிக்கப்பட்டவர் புகார் மனு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details