தமிழ்நாட்டில் சில நாள்களாகவே வெங்காயம் உற்பத்தி பற்றாக்குறையால் விற்பனை விலை அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் எகிப்து, நாசிக் என பல இடங்களிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுவந்தது.
தென்காசி சந்தைக்கு இறக்குமதியான நெதர்லாந்து வெங்காயம்! - netherland onion export on pavoorchatram market
தென்காசி: பாவூர்சத்திரம் சந்தையில் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதியானதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விற்பனை விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெதர்லாந்து வெங்காயம்
அதேபோல், இன்று நெதர்லாந்திலிருந்து 30 டன் வெங்காயம் தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சந்தையில் வெங்காயத்தின் விற்பனை விலை 200 லிருந்து 120 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: பிச்சைக்காரர் வேடமிட்டு வேட்புமனு தாக்கல்