தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குழந்தைகள் விரும்பும் பாடங்களை பயில பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்' - அமைச்சர் ராஜகண்ணப்பன் - கல்லூரி கனவு திட்டம்

குழந்தைகள் விரும்பும் பாடங்களை பயில பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குழந்தைகள் விரும்பும் பாடங்களை பயில பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள்!
குழந்தைகள் விரும்பும் பாடங்களை பயில பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள்!

By

Published : Jul 1, 2022, 9:56 PM IST

திருநெல்வேலி: சாரதா மகளிர் கல்லூரியில் ‘நான் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் ‘கல்லூரி கனவு’ என்ற தலைப்பில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை வகித்தார். இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்குதான் அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் பள்ளிகளை திறந்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

முத்தமிழறிஞர் கருணாநிதி அதிக அளவில் கல்லூரிகளை திறந்தார். இதன் மூலம் இன்று அனைவரும் படிக்கும் நிலை உருவாகியுள்ளது. சமூக நீதியை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர்கள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். மாணவ, மாணவிகள் எதிர் நீச்சல் போடும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்போதுதான் முன்னேற்றம் பெற முடியும்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. கல்வி பயில்வதில் பெற்றோர்கள், குழந்தைகளை வற்புறுத்தக் கூடாது. அவர்கள் விரும்பும் பாடங்களை பயில அனுமதிக்க வேண்டும்” எனப் பேசினார். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ‘கல்லூரி கனவு’ என்ற வழிகாட்டி நூல்களை அமைச்சர் வழங்கினார்.

மேலும், உயர்கல்வி பெறும் 12 மாணவ, மாணவிகளுக்கு 1 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்விக்கடன் உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “கரோனா பரவல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

எனவே பெரிய அளவில் பாதிப்பிற்கு வாய்ப்பில்லை. இருப்பினும் கரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் 1,354 விடுதிகளில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதல் விடுதிகள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:போதிய மாணவர்கள் இல்லாத அரசுப்பள்ளி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details