திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே வி.கே. புரத்தில் பிரசித்திப் பெற்ற பாபநாசம் திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை பாபநாசம் அணைப்பகுதிக்கு வந்துசெல்லும் பெரும்பாலான மக்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கோயிலில், உயிரிழந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக ஏராளமானோர் சனிக்கிழமை வந்துசெல்வார்கள்.
கோயில் எதிரே ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கிவிடும். அதனாலேயே இக்கோயிலுக்கு பாபநாசம் எனப் பெயர் ஏற்பட்டதாக ஒரு வரலாறும் உண்டு. இந்தச் சூழ்நிலையில், பாபநாசம் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் தங்க நகைகள் காணாமல்போனதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.