தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரி விபத்து: உரிமையாளர்கள் சிறையில் அடைப்பு - கல்குவாரி விபத்து

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் அதன் உரிமையாளர்களான தந்தை, மகன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உரிமையாளர்கள் சிறையில் அடைப்பு
உரிமையாளர்கள் சிறையில் அடைப்பு

By

Published : May 22, 2022, 10:14 AM IST

திருநெல்வேலி: திசையன்விளையைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ், அவரது மகன் குமார். இவர்களுக்கு சொந்தமாக பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளத்தில் கல்குவாரி உள்ளது. இங்கு கடந்த 14ஆம் தேதி இரவு பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், தொழிலாளர்கள் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள லாரி டிரைவர் ராஜேந்திரனை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த கல்குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி ஒப்பந்ததாரரான சங்கர நாராயணன், மேலாளர் ஆகிய இருவரை கைது செய்தனர்.

உரிமையாளர்கள் சிறையில் அடைப்பு

இருப்பினும் கல்குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ், அவரது மகன் ஆகிய இருவரும் தலைமறைவானதால் கைது செய்யப்படாமல் இருந்தனர். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மே 20 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இருவரையும் போலீசார் தமிழ்நாடு அழைத்து வந்தனர். இருவரும் பலத்த பாதுகாப்புடன் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையிலான போலீசார் செல்வராஜ், குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு இருவரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி திரிவேணி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிபதி மருத்துவப் பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார். மருத்துவப் பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், இருவருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால், உள் நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் இருவருக்கும் ரத்த அழுத்தம் சீரானதையடுத்து நீதிபதி திரிவேணி முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் 14 நாட்கள் (வரும் 03.06.22 தேதி) வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:அமெரிக்கா செல்ல போலி சான்றிதழ் கொடுத்த தெலங்கானா இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details