தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி மனு! - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த

நெல்லை: மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்தனர்.

tenkasi

By

Published : Nov 19, 2019, 6:44 PM IST

தென்காசியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் தென்காசி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளிக்க வந்திருந்தனர்.

மனுவில், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக முறையான கல்வி பெறவும், கல்விக்கான அரசு நலத்திட்ட உதவிகளைப் பெறவும் தேவைப்படும் சாதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனால், கல்வி கற்பதில் சிக்கல் ஏற்படுகிறது, எனவே எந்த தங்குத் தடையுமின்றி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுத்து உடனடியாக எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தென்காசி வட்டாட்சியர் அலுவலம்

இதுகுறித்து, அச்சமூகத்தைச் சார்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், "சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேர்வெழுதுவதிலும், கல்வி உதவித்தொகை பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் எங்களால் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்கள் சமூகத்திற்கு சாதி சான்றிதழ் வழங்க வாட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: எஸ்சி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details