திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு அருகே உள்ள மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், மேல அம்பாசமுத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 23.06.2020 அன்று குவாட்டர் வாங்கியுள்ளார். அப்போது குவாட்டரின் அதிகபட்ச சில்லறை விலை 160 ரூபாய் என அதில் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால் அதனை 190 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
தன்னிடம் கூடுதலாக 30 ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக் ஊழியர்கள் குறித்து வேல்முருகன், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், கூடுதல் கட்டணம் வசூலித்ததால் மன உளைச்சலும், மூளைச் சூடு ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் நிம்மதி இழந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.