தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 புத்தகங்கள் அரசுடமையாக்க உத்தரவு

நெல்லை வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 புத்தகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அரசுடமையாக்க உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வரலாற்று ஆய்வாளர் திவான் கூறியுள்ளார்.

வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 புத்தகங்களை அரசுடமையாக்க உத்தரவு
வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 புத்தகங்களை அரசுடமையாக்க உத்தரவு

By

Published : Dec 21, 2022, 7:34 AM IST

வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 புத்தகங்களை அரசுடமையாக்க உத்தரவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வாளர் திவான். இவர் மறைக்கப்பட்ட, யாரும் அறியாத பல்வேறு வரலாறுகளை கண்டறிந்து ஆய்வு செய்து தனது எழுத்து மூலம் வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார். 70 வயதாகும் இவர் தற்போதும் புத்தங்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்.

தனது வீட்டை நூலகமாக மாற்றி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளார். இதுவரை அவர் விடுதலைப் போரில் தமிழ்நாடு முஸ்லிம்கள் பங்கு, வ.உ.சியும் பாரதியும், திராவிட இயக்கம் வரலாற்றுக் குறிப்புகள், இந்து - முஸ்லீம் ஒற்றுமை என 150 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

வரலாறு, இலக்கியம், சுதந்திரப் போராட்டம், பக்தி இலக்கியம் என பல துறைகளில் நூல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். தமிழ்மாமணி, தமிழ் அறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், காய்தேமில்லத், பெரியார் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து இலக்கிய உலகில் சாதித்து வரும் வரலாற்று ஆய்வாளர் திவான் எழுதிய 150 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுடமையாக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திவான் கூறுகையில், நான் சிறுவயது முதலே திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். எனது திருமணமே முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடந்தது.

திராவிட இயக்க தலைவர்கள் பற்றி 10-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன். வ.உ.சி பற்றி மட்டும் 25 நூல்களும், பாரதியை பற்றி 5 நூல்களும் எழுதியுள்ளேன். வரலாறு, இலக்கியம், பக்தி, என அனைத்து துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளேன்.நெல்லையில் மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியில் கொண்டுவர வேண்டும். அதுவே எனது லட்சியம். அதனை நோக்கியே என் பயணம் இருக்கும். எனக்கு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அங்கீகாரமாக எனது நூல்களை அரசுடமையாக்கியுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கும், இந்த அரசுக்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை - நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details