தமிழ்நாடு

tamil nadu

ஆக்ஸிஜன் ஆலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு

By

Published : May 14, 2021, 6:54 PM IST

Updated : May 14, 2021, 8:31 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் செயல்படாமல் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளை மீண்டும இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ட்ஃப்ச
ட்ஃப்ச

தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பு முன்னேற்றப் பணிகளை ஆய்வு செய்தார். அதன்படி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி அருகே காந்திமதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யோக கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அதே பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்.

அதன் பிறகு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆலையில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள், தொழில்நுட்ப பிரச்னைகளை சரிசெய்ய அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்து, ஆலையை விரைந்து இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என உரிமையாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அங்கு ரூர்கேலாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் அங்குள்ள சிலிண்டர்கள் மூலம் நிரப்பப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியையும் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் இயங்காமல் இருக்கும் தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

தற்போதுள்ள ஆக்ஸிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஆலையை இயக்க நடவடிக்கை எடுப்பதோடு, ஆலையை இயக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு சார்பில் செய்துகொடுப்பதாக அதன் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலை 2014ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருக்கிறது. அதனை உடனடியாக இயக்க ஐ.ஏ.எஸ் அலுவலர் அந்தஸ்த்தில் உள்ள நெல்லை கோட்டாட்சித் தலைவரை பொறுப்பு அலுவலராக நியமித்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் இந்த ஆலையில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

இதேபோல தமிழ்நாடு முழுவதும் இயங்காமல் இருக்கும் ஆக்சிஜன் ஆலைகளை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவுப்படி முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக ஆக்ஸிஜன் உற்பத்தி தடைபட்டுள்ளது” என்றார்.

Last Updated : May 14, 2021, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details